Friday, 31 January 2014

மெய்பொருள் நாயனார்

       திருக்கோவிலூர் என்னும் ஊரில் கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மெய்பொருள் நாயனார். இம் மன்னர் சிவனடியார்களiன் திருவேடத்தையே மெய்ப்பொருள் என்று எண்ணியதால் மெய்பொருள் நாயனார் என்னும் பெயர் பெற்றார். இவர் மக்களுக்காக நன்னெறியில் வாழ்ந்துகாட்டியவர். இவரது செல்வம் முழுவதும் கோயில் திருப்பணிகளுக்கு பயன்பட்டு வந்தது.இவரது பகை அரசனான முத்தநாதன் இவருடன் பலமுறை போரிட்டு புறமுதுகு காட்டி ஓடியவர். எனவே இவரைச் சூழ்ச்சியால் வெல்ல திfட்டமிட்டார். ஒருநாள் சிவ வேடம் அணிந்து சில ஓலைச்சுவடுகளை கையில் எடுத்துக்கொண்டார். ஓலைச்சுவடுகளiன் நடுவில் கத்தியையும் மறைத்து வைத்துக்கொண்டு மெய்ப்பொருள் நாயனாரை சந்த்iக்க சென்றார். வழியில் காவலன் தத்தன் தடுத்தும் கேளாமல் மன்னரை பார்க்க அவரது அறைக்குள் சென்றார். அங்கு சிவனடியாரைக் கண்ட மன்னர் உடனே அவரை வணங்கி வந்த விஷயம் என்ன என்று கேட்டார். அதற்கு முத்தநாதன் சிவபெருமான் பண்டைக்காலத்தில் அருளiய ஆகமநூல் ஒன்று என்னிடம் உள்ளது. அதை உனக்கு எடுத்துக்கூறி உனக்கு மோட்சபதவி அளiக்க வந்தேன் என்று கூறினார்.இவரது வார்த்தையை உண்மை என்று நம்பிய அரசர் இதைவிடச் சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை. 


நீங்கள் ஆகமநூலை வாசித்து  எனக்கு அருள்செய்யுங்கள் என்று கூறினார். முத்தநாதன் சிறிது நேரம் யோசிப்பது போல் மன்னரையும் அரசியையும் மாறி மாறி பார்த்தார். உடனே மன்னர் நீங்கள் ஏதோ கூற தயங்குகிறீர்கள். அது என்ன? என்று கேட்க, முத்தநாதனும் ஆகம நூலை உரைக்கும்போது அரசியார் அருகில் இருக்கக்கூடாது என்று கூறியவுடன் அரசியார் அந்தப்புரம் சென்றுவிட்டார்.முத்தநாதன் திருநீறை தானும் பூசிக்கொண்டு மன்னருக்கும் கொடுத்தார். மன்னரும் திருநீற்றை இட்டுக்கொண்டு நூலை அருளும்படி முத்தநாதனை வணங்கினார். அப்போது முத்தநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மன்னரை குத்தினார். அந்நிலையிலும் மன்னர் முத்தநாதன் மீது கோபப்படவில்லை. இதை மறைந்திருந்து பார்த்த மெய்காப்பாளன் தத்தன் நொடிப்பொழுதில் உள்ளே வந்து முத்தநாதனை கொல்ல தன் உடைவாளை உருவினான். உடனே மன்னர், தத்தா, இவர் நம்மவர், இவருக்கு எந்தவிர கெடுதலும் ஏற்படாமல் நம் எல்லை வரை கொண்டு போய் விட்டுவிட்டுவா என்று கூறினார்.மன்னருக்கு ஏற்பட்ட துன்பம் நகரெங்கும் பரவியது. மக்கள் முத்தநாதனின் செயலைகண்டு வெகுண்டனர். தத்தன் மன்னரின் ஆணையைக் கூறினார். தத்தன் முத்தனாதன் எல்லையை கடந்ததும் மன்னரிடம் மீண்டும் ஓடிவந்து, மன்னா தங்கள் ஆனைப்படி அவருக்கு எந்த தீங்கும் இன்றி எல்லையை கடந்து அனுப்பிவைத்தேன் என்று கூறினார். தத்தன் வரும்வரை காத்திருந்த உயிர் தத்தன் கூறிய செய்தியைக் கேட்டதும் இன்றைக்கு என் ஐயன் செய்தது யாரே செய்யவல்லார் என்று கூறியவாறே பிரிந்தது. அப்பொழுது சிவன் சக்தி சமேதராய் எழுந்தருளi மெய்பொருளாரை உயிர்ப்பித்தார். இதைக்கண்ட அரசியார், தத்தன், மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.மெய்ப்பொருளாருக்கும் அவரது மனைவியாருக்கும் தம்மோடு வாழும் பேற்றினை சிவன் அளiத்தார். உயிர் போகும் சமயத்திலும் சிவனடியார்களiடமும், திருநீறு அணிந்தவர்களiடமும் பக்தி உடையவர்களாய் இருங்கள் என்று வாழந்து காட்டியவர். மெய்ப்பொருளார்.

No comments:

Post a Comment