Tuesday, 7 January 2014

முத்தைத் தரு பாடலும் பத உரையும்

முத்தைத்தரு பத்தித் திருநகை
                அத்திக்கிறை சத்திச் சரவண
                 முத்திக்கொரு வித்துக் குருபர                  எனவோதும்
  முக்கட்பர மற்குச் சுருதியின்
                முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும்                  அடிபேணப்
 பத்துத்தலை தத்தக் கணைதொடு
 ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில்                  இரவாகப்
 பத்தற்கிர தத்தைக் கடவிய
                 பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
                பட்சத்தொடு ரட்சித் தருள்வது                   மொருநாளே
  தித்தித்தெய ஒத்தப் பரிபுர
 நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
                திக்கொட்கந டிக்கக் கழுகொடு                  கழுதாட
 திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
 சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக                             எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
 குக்குக்குகு குக்குக் குகுகுகு                     
                குத்திப்புதை புக்குப் பிடியென                    முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
 வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல                                       பெருமாளே.
பதம் பிரித்தல்
முத்தை தரு பத்தி திரு நகை
அத்திக்கு இறை சத்தி சரவண
முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்

முக்கண் பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண

பத்து தலை தத்த கணை தொடு
ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு
பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக

பத்தற்கு இரதத்தை கடவிய
பச்சை புயல் மெச்ச தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே ?

தித்தித்தெய ஒத்த பரிபுர
நிர்த்த பதம் வைத்து பயிரவி
திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட

திக்கு பரி அட்ட பயிரவர்
தொக்கு தொகு தொக்கு தொகுதொகு
சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத

கொத்து பறை கொட்ட களம் மிசை
குக்கு குகு குக்கு குகுகுகு
குத்தி புதை புக்கு பிடி என முது கூகை

கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை
வெட்டி பலி இட்டு குலகிரி
குத்துப்பட ஒத்து பொர (ல்) பெருமாளே.
பத உரை
முத்தை             =   முத்துப் போன்ற முத்திச் செல்வத்தை.
தரு                 =   அளிக்கும்.
 பத்தித் திரு நகை = வரிசையாய் விளங்கும் பற்களை உடைய.
அத்திக்கு                  = யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு.
இறை                         = இறைவனே.
சத்தி             = சத்தி வேல் (ஏந்திய).
சரவண           = சரவணபவனே.
முத்திக்கு                  = வீட்டுப் பேற்றுக்கு.
ஒரு வித்து               = ஒரு வித்தே.
குருபர           = குரு மூர்த்தியே.
 என ஓதும்                = என்று ஓதுகின்ற.

முக்கண் பரமற்கு  = மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு.
சுருதியின் முற்பட்டது = வேதத்தில் முற்பட்டு நிற்கும் பிரணவத்தை.
கற்பித்து                              = கற்பித்து.
இருவரும்            = பிரமன்திருமால் ஆகிய இருவரும்.
முப்பத்து மூ வர்க்கத்து = முப்பது மூன்று வகையான
அமரரும்             = தேவர்களும்.
அடி பேண            =  (உனது)திருவடியை விரும்ப 
                                                       (அவுணருடன் போர் செய்த பெருமாளே)
பத்துத் தலை தத்த     = (இராவணனுடையபத்து தலைகளும் சிதறும்படி.
கணை தொ(ட்)டு             = அம்பைச் செலுத்தியும்.
ஒற்றைக் கிரி மத்தை  = ஒப்பற்ற மந்தரம் என்னும் மலையை மத்தாக நட்டு.
பொருது                              = (கடலைக்கடைந்தும்.
ஒரு பட்டப்பகல்       = ஒரு பட்டப் பகலை.
வட்ட                வட்ட வடிவமாக உள்ள.
திகிரியில்                = சக்கரத்தினால்.                   
இரவாக                               = இரவாகச் செய்தும்.
பத்தற்கு இரதத்தைக் கடவிய = பத்தனாகிய அருச்சுனனுடைய தேரைப் 
                                  பாகனாகஇருந்த நடத்திய.
 பச்சைப் புயல்         பச்சை மேகம் போல் நிறமுடைய திருமால்.
 மெச்சத் தகு பொருள்      = மெச்சத் தகுந்த பொருளே.
பட்சத்தொடு           = (என் மீதுஅன்பு வைத்து.
ரட்சித்து அருள்வதும்   (என்னைக்காத்தருளும்.
அருள்வதும்ஒரு நாளே = ஒரு நல்ல நாளும் உண்டாகுமா?
தித்தித்தெய ஒத்து       = தித்தித்தெய என்னும் தாளத்துக்கு ஒத்த வகையில்.
பரிபுரம்                 = சிலம்பு (அணிந்த).
நிர்த்தப் பதம் வைத்து         = நடனப் பதத்தை வைத்து.
பயிரவி                 காளி.                
திக்கு                                           = திக்குகளில்.
ஒட்க நடிக்க                             = சுழன்று நடிக்கவும்.     
கழுகொடு                                 = கழுகுகளுடன்.
கழுது                   பேய்கள்.                                             
ஆட                                              = ஆடவும்.
திக்குப் பரி                                 = திக்குகளைக் காக்கும்
அட்டப் பயிரவர்                      = எட்டு பயிரவர்கள்.
தொக்கு.....தொகு                     = தொக்குத் தொகு என வரும்.
சித்ர                                              = அழகிய.                        
பவுரிக்கு                                     = மண்டலக் கூத்தை.  
த்ரிகடக என ஓத          = த்ரிகடக என்று ஓதவும்.
கொத்துப் பறை                        = கூட்டமான பறைகள்.
கொட்ட                                        = முழங்கவும்.                             
 களம் மிசை                               = போர்க் களத்தில்.
குக்குக்குகு...குத்திப் புதை புக்குப் பிடி= இவ்வாறு ஒலி செய்து.
முது கூகை                                = கிழக் கோட்டான்கள்.
கொட்புற்று எழ                        = வட்டம் இட்டு எழவும்.
நட்பு அற்ற அவுணரை     = பகைவர்களாகிய அசுரர்களை.
வெட்டிப் பலி இட்டு               = வெட்டிப் பலி இட்டு.
குலகிரி                                        = குலகிரியாகிய கிரௌஞ்ச மலை.
 குத்துப்பட ஒத்து          = குத்துப்படத் தாக்கி.
பொர (ல்)                             = சண்டை செய்ய வல்ல.
பெருமாளே                                 = பெருமாளே.
சுருக்க உரை
          வீட்டுப்பேற்றை அளிக்கும்வரிசையாகப் பற்களை உடையவளும்
யானையால் வளர்க்கப்பட்டவளுமாகிய  தேவசேனைக்கு இறைவனே,
சத்தி வேலைத் தாங்கிய சரவணனேமுத்திக்கு ஒரு வித்தேஞான
குருவே என்று துதித்து நின்றமுக்கண் பரமனாகிய சிவ
பெருமானுக்குப் பிரணவப் பொருளைக் கற்பித்தவரேபிரமன்,
திருமால் ஆகிய இருவரும்முப்பத்து மூன்று தேவர்களும் உனது
திருவடியைப் போற்றி விரும்ப அவுணருடன் போர் செய்தவரே.

              இராவணனுடைய பத்துத் தலைகளைச் சிதறும்படி அம்பைச்
செலுத்தியவரும்மந்தர மலையை மத்தாகநட்டு கடலைக் கடைந்த வரும்,  
பகலை தனது சக்கரத்தால் இரவாக்கியவரும், அருச்சனனுடைய தேரைச்ஓட்டியவரும் பச்சை நிறமுடையவரும் ஆகிய   திருமால் மெச்சிய மருகனேஎன்மீது அன்பு   வைத்து என்னைக் காத்து  
அருளுவதும் ஒரு நாள் ஆகுமோ?தாளத்துக்கு ஒத்தவாறு பதத்தை வைத்து, பயிரவி சுழன்று நடிக்கவும் கழுகுகள்,பேய்கள் ஆடவும்எட்டுத் திக்குப்   பயிரவர்கள் மண்டலக் கூத்து ஆடவும்பறைகள்முழங்க போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்ஓலமிடவும்அசுரர்களை வெட்டி,கிரௌஞ்ச மலை   பொடி ஆகும்படி போர் செய்த பெருமாளேஎன்னைக்காத்தருளுவதும்   ஒருநாள் உண்டாகுமோ?

No comments:

Post a Comment